தூத்துக்குடியில் பிளம்பர் ஒருவர் மர்மமாக இறந்தார். அவரது உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதிசடங்குகள் செய்தபோது போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த மூர்த்தி மகன் கர்த்தீஸ்வரன் என்ற காளி(25) திருமணமாகாத இவர் பிளம்பிங்க் வேலை பார்த்துவந்தார். நேற்று மங்காளபுரம் பகுதியில் பரமசிவன் என்பவர் வீட்டில் பிளம்பிங் வேலை யில் ஈடுபட்டிருந்தார்.
திடீரென்று அவர் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்த அங்குள்ளவர்கள் கார்த்தீஸ்வரனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து போலீசிற்கு தகவல் தெரிவிக்காமல் அவரது குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்வதற்கான இறுதிச்சடங்கில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசிற்கு தெரியவரவே இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்க சென்று கார்த்தீஸ்வரன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment