Showing posts with label Anna Hazare. Show all posts
Showing posts with label Anna Hazare. Show all posts

Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரேக்கு ஆதரவாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேரணி




லோக்பால் சட்ட மசோதாவில், பிரதமர், நீதிபதி ஆகியோரை சேர்க்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினர்.

காந்தியவாதியும் பிரபல சமூக சேவை ஆர்வலருமான அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஊழல்வாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் ஒரே குரலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது. 

இந்நிலையில் அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக, தூத்துக்குடியில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து தொடங்கி இந்த பேரணி பழைய நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.