Tuesday, August 23, 2011

விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை: 65 சிலைகள் வருகை



தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்வதற்காக 65 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் 65 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யப்படுகிறது.

இதற்காக கொம்மடிக்கோட்டையில் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அனைத்து சிலைகளும் தூத்துக்குடி சிவன் கோவிலில் வைக்கப்பட்டு உள்ளன. இதில் 12 அடி உயர ராஜவிநாயகர், வீரவிநாயகர் மற்றும் 10, 7, 5, 3 அடி உயர 65 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. 

விநாயகர் புலி வாகனம், சிம்ம வாகனம், அன்னப் பறவையில் அமர்ந்து இருப்பது போன்றும் பல்வேறு தோற்றங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் வருகிற 1ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 4ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) திலகர் திடலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. 

ஊர்வலம் கீழரதவீதி, சிவன்கோவில் தெரு, காசுக்கடை பஜார், 1-ம் கேட், மட்டக்கடை, கிழக்கு கடற்கரைசாலை வழியாக திரேஸ்புரம் சங்குமுக விநாயக கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் செய்து வருகின்றனர். 

No comments:

Post a Comment