இந்திய மாதர் தேசிய சம்மேளன தூத்துக்குடி மாநகர 3வது மாநாடு அன்னத்தாய் திருமண மண்டபத்தில் மாநில குழு உறுப்பினர் மனோன்மணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாநகர செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் மாடசாமி, மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் தனலெட்சுமி, தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு குழு அமைப்பாளர் அருள் செல்வி, மாநிலக்குழு உறுப்பினர் மெடோனால் உட்பட பலர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெண்களுக்கு பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சரிபாதி போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். சின்னத் திரைகளிலும், திரைப்படங்களிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விளம்பரங்களும், ஆபாச நிகழ்ச்சிகளையும் தடைசெய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனை படுக்கை இல்லாத வார்டுகளில், படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான பால்ராஜ் 46வது வார்டு மாணிக்கவாசகம், 7வது வார்டு ஜெயக்குமார், 11வது வார்டு சுப்பிரமணியம் மறைவுக்கு 2 நிமிடங்கள் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ராமலெட்சுமி, ராமன், பாண்டி, அந்தோணி சவுந்தர்ராஜன், மாவட்ட கன்வினர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment